sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த பள்ளி மேலாண்மை குழு திருவொற்றியூர் பள்ளி அசத்தல்

சிறந்த பள்ளி மேலாண்மை குழு திருவொற்றியூர் பள்ளி அசத்தல்

சிறந்த பள்ளி மேலாண்மை குழு திருவொற்றியூர் பள்ளி அசத்தல்


UPDATED : ஜன 25, 2024 12:00 AM

ADDED : ஜன 25, 2024 09:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2024 12:00 AM ADDED : ஜன 25, 2024 09:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்:
திருவொற்றியூர் - ராமநாதபுரம் சென்னை நடுநிலைப் பள்ளியில், 1 - 8 ம் வகுப்பு வரை, 550 பள்ளி மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில், லீமாரோஸ் தலைமையில், கவுன்சிலர் ஜெயராமன், சாமுவேல் திரவியம் உட்பட 20 பேர் இடம் பெற்றுள்ள பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. பள்ளியின் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, வகுப்பறை பராமரிப்பு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கூடுதல் ஆசிரியர்களுக் கு சம்பளம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இக்குழுவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுகிறது.தேசிய திறனாய்வு தேர்விற்கு தயாராகும், எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு மாலையில் சிற்றுண்டி வழங்குதல், இடைநிற்றல் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு அறிவுரை வழங்கி, கல்வியை தொடர செய்வது உள்ளிட்ட பணிகளையும் இக்குழுவினர் மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், 2022 - 23 ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருது, திருவொற்றியூர். ராமநாதபுரம் சென்னை நடுநிலைப்பள்ளிக்கு கிடைத்துள்ளது. சென்னை, நந்தம்பாக்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் லீமாரோஸ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us