தொழில் முனைவோருக்கான கண்டுபிடிப்பு திட்டம் வடிவமைப்பு பற்றி விழிப்புணர்வு
தொழில் முனைவோருக்கான கண்டுபிடிப்பு திட்டம் வடிவமைப்பு பற்றி விழிப்புணர்வு
UPDATED : ஜன 25, 2024 12:00 AM
ADDED : ஜன 25, 2024 09:52 AM
புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப மையம் மற்றும் காரைக்கால் என்.ஐ.டி., நிறுவனம் இணைந்து எம்.எஸ்.எம்.இ., கண்டுபிடிப்புத் திட்டத்தின் வடிவமைப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தொழில்முனைவோருக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான எம்.எஸ்.எம்.இ., கண்டுபிடிப்பு திட்டத்தின் வடிவமைப்பு குறித்து புதுச்சேரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர் செந்தில்குமார், மஹாபத்ரா, அசோசியேட் டீன் அன்சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில்முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், புதிய தயாரிப்பு மேம்பாட்டிற்கு ரூ. 40 லட்சம் வரை நிதியுதவியுடன், எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம் வழங்கும் கணிசமான நிதி உதவியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தொழில்முனைவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், நிதி உதவி மற்றும் வழிகாட்டுதல் மூலம் வணிக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதன் மூலம், எம்.எஸ்.எம்.இ., கண்டுபிடிப்புத் திட்டத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த அமர்வின் போது, பங்கேற்பாளர்கள் விண்ணப்ப செயல்முறை, மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் நிறுவனங்களின் வெற்றியை கணிசமாக பாதிக்கும் முக்கியமான காரணிகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.