sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூபிக்ஸ் க்யூப்ஸ் விளையாட்டு பிளஸ் 1 மாணவர் கின்னஸ் சாதனை

ரூபிக்ஸ் க்யூப்ஸ் விளையாட்டு பிளஸ் 1 மாணவர் கின்னஸ் சாதனை

ரூபிக்ஸ் க்யூப்ஸ் விளையாட்டு பிளஸ் 1 மாணவர் கின்னஸ் சாதனை


UPDATED : ஜன 26, 2024 12:00 AM

ADDED : ஜன 26, 2024 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2024 12:00 AM ADDED : ஜன 26, 2024 12:01 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை, மேற்கு அண்ணா நகரை அடுத்த திருமங்கலம் பகுதியில் வசிக்கும் டாக்டர்களான ராஜ்மோகன் - ஹேமலதா தம்பதியின் மகன் கனிஷ், 16; அதே பகுதியிலுள்ள சென்னை பப்ளிக் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார்.இவர், கடந்த சில தினங்களுக்கு முன், அண்ணா நகர் பகுதியில், இடைவிடாமல் 24 மணிநேரத்தில், 9,793 ரூபிக்ஸ் க்யூப்ஸ்களுக்கு தீர்வு கண்டு, கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.இதுகுறித்து, சிறுவன் கனிஷ் கூறியதாவது:
எட்டு ஆண்டுகளுக்கு முன், மூன்றாம் வகுப்பு படித்த போது,&'ரூபிக்ஸ் க்யூப்&' பற்றி தெரிந்து கொண்டேன். அதன் பின், இந்த விளையாட்டில் ஆர்வம் வந்தது. ஆன்லைனில் வீடியோ பார்த்து பயிற்சி செய்தேன்.கடந்த 16ம் தேதி காலை, 7:45 மணிக்கு துவங்கிய சாதனை முயற்சி, அடுத்த நாள் 7:45 மணிக்கு நிறைவடைந்தது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஐந்து நிமிடம் ஓய்வெடுத்தேன். ஒரு மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட க்யூப்ஸ்களுக்கு தீர்வு காண முடிந்தது.மொத்தம் 24 மணிநேரத்தில், 9,793 க்யூப்ஸ்களுக்கு தீர்வு கண்டு சாதனை படைத்தேன். இந்த சாதனையை நேரடி வீடியோ ஒளிபரப்பு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us