UPDATED : ஜன 26, 2024 12:00 AM
ADDED : ஜன 26, 2024 05:05 PM
விருத்தாசலம்:
கடலுார் மாவட்டத்தில், பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு ஏதுவாக ஒன்றியம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், விருத்தாசலம் ஒன்றிய இரண்ட டுக்கு குழு கூட்டம் விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நேர்முக உதவியாளர் செந்தில்குமார், பி.டி.ஓ., ராதிகா, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், பள்ளி துணை ஆய்வாளர் சிவாஜி, வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, விமலா, தொழிலாளர் நல ஆய்வாளர் சார்லி, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் பேசுகையில், பள்ளி இடை நின்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை நடப்பாண்டு பொதுத்தேர்வை எழுத வழிவகை செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கண்காணித்து பள்ளிக்கு வர ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளி அளவில் முதல் அடுக்கு குழுவினை பலப் படுத்த ஏதுவாக அந்தந்த ஊராட்சி தலைவர், வி.ஏ.ஓ.,க்களை ஒருங்கிணைத்து பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிக்கு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.அதற்கேற்ப வாட்சஆப் குழு உருவாக்கி கண்காணிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.