sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணை ஜனாதிபதி 28ல் புதுச்சேரி வருகை: மாணவர்களுடன் கலந்துரையாடல்

துணை ஜனாதிபதி 28ல் புதுச்சேரி வருகை: மாணவர்களுடன் கலந்துரையாடல்

துணை ஜனாதிபதி 28ல் புதுச்சேரி வருகை: மாணவர்களுடன் கலந்துரையாடல்


UPDATED : ஜன 26, 2024 12:00 AM

ADDED : ஜன 26, 2024 05:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2024 12:00 AM ADDED : ஜன 26, 2024 05:07 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வரும் 28ம் தேதி வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வரும் 28ம் தேதி, டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு மாலை 5:15 மணிக்கு வருகிறார். பின், சாலைமார்க்கமாக காலாப்பட்டு புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு சென்று, மாணவர்களுடன் மாலை 6. 45 மணிக்கு கலந்துரையாடுகிறார்.பின், கடற்கரை சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்குகிறார். மறுநாள் (29ம் தேதி) காலை அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவிலில் சாமிதரிசனம் செய்கிறார். பின், ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் சென்று நடராஜரை தரிசனம் செய்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுச்சேரி போலீசார் மேற்கொண்டுள்ளனர்.இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் பல்கலைக்கழகத்திலும் அதன் உறுப்பு கல்லுரிகளிலும் வளர்ந்த இந்தியா திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிறப்பு வல்லுநர்கள் பேச்சுக்கள், குழு விவாதங்கள், மினி - மாரத்தான், துறை அளவிலான பயிலரங்குகள், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முகாம், கட்டுரை, விவாதம், வினாடி வினா, ஓவியப் போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.அதன் ஒரு பகுதியாக வளர்ந்த பாரதம்-2047 என்ற தலைப்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வரும் 28ம் தேதி வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். பல்கலைக்கழக அதிகாரிகள், அறிஞர்களும் பங்கேற்கின்றனர்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us