UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 29, 2024 09:38 AM
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட, கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 1,410 மாணவ, மாணவியர் பயின்றி வருகின்றனர். மாணவ, மாணவியருக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டுமென, பள்ளி நிர்வாகம், எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்திருந்தது.தலைமை ஆசிரியர் பிச்சாண்டி கோரிக்கையை ஏற்று, திருப்பூர் வடக்கு தொகுதி வளர்ச்சி நிதியில், 9.98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, சுத்திகரிக்கப்பு கருவி பொருத்த, எம்.எல்.ஏ., பரிந்துரைத்தார். கலெக்டருக்கு பரிந்துரைத்து இரண்டு மாதங்களாகியும், பணிகள் துவங்கப்படவில்லை. போதிய குடிநீர் வசதியில்லாமல், மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கியும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், விரைந்து பணிகளை துவக்காமல் இருக்கின்றனர். பணியை இழுத்தடிக்காமல், மாணவ, மாணவியர் நலன்கருதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியை துவக்க, கலெக்டர் உத்தரவிட வேண்டும், என்றனர்.