sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனுடன் நாப்கின்! கோவை கல்லுாரி ஆராய்ச்சிக்கு வெற்றி

நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனுடன் நாப்கின்! கோவை கல்லுாரி ஆராய்ச்சிக்கு வெற்றி

நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனுடன் நாப்கின்! கோவை கல்லுாரி ஆராய்ச்சிக்கு வெற்றி


UPDATED : ஜன 29, 2024 12:00 AM

ADDED : ஜன 29, 2024 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2024 12:00 AM ADDED : ஜன 29, 2024 09:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை கல்லுாரியில், நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் கொண்ட, எளிதில் மட்கும் தன்மையுடைய குழந்தைகளுக்கான டயபர் மற்றும் மகளிருக்கான நாப்கின் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ், கோவை பீளமேடு பகுதியில், சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி செயல்பட்டு வருகிறது.தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இக்கல்லுாரியில் படித்து வருகின்றனர். இக்கல்லுாரியில், மெடிக்கல், ஆட்டோமொபைல், அக்ரி, டெக்னிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், ஜவுளி பயன்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக, 2023 ஏப்., மாதம் மத்திய அரசின் ஜவுளித்துறையின் நிதியுதவியோடு, இயற்கை பொருட்களை கொண்டு, டயபர், நாப்கின் தயாரிக்கும் ஆராய்ச்சி துவக்கப்பட்டது.பத்து மாத ஆராய்ச்சியில், பேராசிரியர்கள் பிரகாஷ், பிரியங்கா மற்றும் குழுவினர் பங்கேற்று வெற்றியும் கண்டுள்ளனர். இதுகுறித்து, கல்லுாரி இயக்குனர் அல்லிராணி கூறுகையில், சந்தைகளில் கிடைக்கும் டயபரில் கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவதால், தோல் சார்ந்த பாதிப்புகள் வருகின்றன.இதற்கு தீர்வு காணும் வகையில், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் கொண்ட நாப்கின், டயபர் உருவாக்கியுள்ளோம். இதில், அஸ்வகந்தா, கொட்டை கரந்தை போன்ற குறிப்பிட்ட வேறுபட்ட அளவுகளில் மூலிகைகளை எடுத்து, பொடிகளாகவும், சாறுகளாகவும் எடுத்து பயன்படுத்தியுள்ளோம்.காட்டன், மூங்கில் உள்ளிட்ட ஐந்து இயற்கை பொருட்களில் இருந்து, நார்கள் பிரித்தெடுத்து இதனை தயாரித்துள்ளோம். உரிய தர ஆய்வு செய்து; அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம், என்றார்.லெதர் பொருட்கள்!
பேராசிரியர் சதீஷ்குமார் கூறுகையில், இக்கல்லுாரியில், காய்கறி கழிவுகள் மற்றும் கம்பளி கழிவுகளை கொண்டு, தோல் பொருட்கள் தயாரிக்கும் ஆய்வு, இறுதிகட்டத்தில் உள்ளது. தற்போது, கண் கண்ணாடி வைக்கும் பவுச், கைப்பை காய்கறி மற்றும் கம்பளி கழிவுகளில் இருந்து உருவாக்கிய, தோல் மூலம் மாதிரி வடிவமைத்துள்ளோம். தொடர்ந்து, அனைத்து வகையான தோல் பொருட்களையும், மிகவும் தரமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us