sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவுப்பசியை மேம்படுத்தும் அறிவு களஞ்சியம்!

அறிவுப்பசியை மேம்படுத்தும் அறிவு களஞ்சியம்!

அறிவுப்பசியை மேம்படுத்தும் அறிவு களஞ்சியம்!


UPDATED : ஜன 29, 2024 12:00 AM

ADDED : ஜன 29, 2024 09:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 29, 2024 12:00 AM ADDED : ஜன 29, 2024 09:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
அறிவு பசியை மேம்படுத்தி, வாசகர்களை அதிகரிக்க செய்யும் சீமையான சிவகங்கையில் பிப்., 6 வரை நடக்கும் புத்தக திருவிழா மற்றும் கண்காட்சியில் புத்தகங்கள் வாசகர்களின் அறிவு தேடலுக்கு இரையாகி வருகிறது.சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகம் துறையுடன் பபாசி இணைந்து 3ம் ஆண்டு புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி நேற்று துவங்கியுள்ளது. பிப்., 6 வரை தினமும் காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும்.கலெக்டர் ஆஷா அஜித் தலைமையிலான அதிகாரிகள் தினமும் கண்காட்சி வளாகத்தில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம், பாட்டு மன்றம், இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.புத்தகங்கள் இலவசம்
கண்காட்சி நுழைவு வாயிலில் வளர்ச்சித்துறையினர் சார்பில் கூப்பன் வழங்கப்படுகிறது. அதனை பூர்த்தி செய்து பெட்டியில் போட வேண்டும். தினமும் குலுக்கி எடுத்து, தலா ஒரு நபருக்கு ரூ.500 மதிப்பிலான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.கண்காட்சிக்கு வரும் மாணவர்கள், குடும்ப தலைவர், தலைவிகள், வரலாற்று ஆர்வலர்களின் அறிவு பசியை பூர்த்தி செய்யும் விதமாக 110 ஸ்டால்களில் லட்சக்கணக்கான வரலாற்று, இலக்கியம் மட்டுமின்றி போட்டி தேர்வுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., புத்தகங்கள், மருத்துவம், நீட், டெட் தேர்வுக்கான பொது அறிவு புத்தகங்கள் கண்காட்சியை அலங்கரிக்கின்றன. இங்கு ஒரு புத்தகத்தின் விலை ரூ.10 ல் இருந்து அதிகபட்சம் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us