உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 07:10 AM
புதுடில்லி:
2021- 22 கல்வியாண்டில் உயர்கல்வி படிக்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது.உயர்கல்வி குறித்த அகில இந்திய அளவில் ஆய்வு கடந்த 2011 முதல் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. 2021- 22 கல்வியாண்டிற்கான ஆய்வை மத்திய அரசு ஜன.,25ல் வெளியிட்டது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
2020- 21 கல்வியாண்டில் 4.14 கோடி பேர் உயர்கல்வி படிக்க விண்ணப்பித்தனர். ஆனால், 2021- 22ம் கல்வியாண்டில் 4.33 கோடி பேர் விண்ணப்பம் செய்தனர். இதில், 1.57 கோடி பேர் பெண்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 66.23 லட்சம் பேரும் விண்ணப்பித்தனர். இவர்களில் 31.71 லட்சம் பேர் பெண்கள் ஆவார்கள்மேலும், நாடு முழுவதும் பல்கலை மற்றும் அதற்கு நிகரான கல்வி அமைப்புகள் என 1,168 பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், 45,473 கல்லூரிகளும் மற்றும் 12,002 கல்வி நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டு இருந்தன.இளநிலை பட்டப்படிப்புகளில் கலை சார்ந்த பாடங்களை படிப்புகள் படிக்க 34.2 சதவீதம், அறிவியல் படிக்க 14.8 சதவீதம், வணிகம் சார்ந்த பாடங்களை படிக்க 13.3 சதவீதம் பேரும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் படிக்க 11.8 சதவீதம் பேர் விண்ணப்பம் செய்தனர்.பட்ட மேற்படிப்புகளில், சமூக அறிவியல் படிக்க 21.1 சதவீதம் பேரும் அறிவியல் படிக்க 14.7 சதவீதம் பேரும் விண்ணப்பித்து இருந்தனர். பிஎச்டி படிக்க 81.2 சதவீதம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என கல்வி நிறுவனங்களில் 15,98 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அதில் 56.6 சதவீதம் பேர் ஆண்கள். 43.4 சதவீதம் பேர் பெண்கள். கடந்த ஆண்டுகளை காட்டிலும், தற்போது பெண் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.