UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகத்தமிழ் ஆராய்ச்சிமன்றம் சார்பில், அடுத்தாண்டு மே மாதம், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 12வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மூன்று நாள் மாநாடு நடக்க உள்ளது. சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பங்கேற்க விரும்புவோர், பல்வேறு தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகளை எழுதலாம்.இந்த மாநாட்டிற்கு, பிறமொழிகளை சேர்ந்த தமிழ் ஆராய்ச்சியாளர்களும் அழைக்கப்பட உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் உரையாடும் வகையில் சிறப்பு அமர்வுகளும் அமைக்கப்பட உள்ளது.தமிழர்களின் பாரம்பரிய உணவு, மருத்துவம், கலை, நெசவு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. எழுத்தாளர்கள் நுால்களை அறிமுகம் செய்ய அரங்கும் ஒதுக்கப்பட உள்ளது.