போர்ச்சூழலிலும் தமிழ் பாதுகாக்கப்படுகிறது; முன்னாள் துணைவேந்தர் பெருமிதம்
போர்ச்சூழலிலும் தமிழ் பாதுகாக்கப்படுகிறது; முன்னாள் துணைவேந்தர் பெருமிதம்
UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 09:40 AM
சின்னாளபட்டி:
புலம் பெயர்ந்த போர்ச்சூழலிலும் தமிழ் மொழியும், பண்பாடும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலை தமிழ் துறை சார்பில் நடந்த உலகளாவிய தமிழ் பண்பாட்டு பரவல் குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் யாழ்ப்பாணம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கலாநிதி சண்முகலிங்கன் பேசினார்.அவர் பேசியதாவது:
தமிழர்களின் உலகளாவிய பரவல் நுட்பமாக பார்க்க தகுந்தது. தமிழர் கலை, இசை, இலக்கியங்கள் அவற்றில் வெளிப்படும் மனித விழுமியங்கள் உலக மக்கள் அனைவராலும் ஏற்க கூடியதாக அமைந்துள்ளது. பிற நாட்டவர்கள் தமிழ் மொழியையும் இசையையும் விரும்பி கற்று மேடை நிகழ்ச்சிகளை நடத்துவது பெருமைக்குரியது. புலம் பெயர்ந்து போர்ச்சூழலிலும் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் சிறப்பாக பாதுகாத்து வருவது பாராட்டுதலுக்கு உரியது என்றார்.சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் பேராசிரியர் அருணாச்சலம் தலைமை வகித்தார். பல்கலை (பொறுப்பு) பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் முத்தையா வரவேற்றார்.