UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 09:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், நுால் அறிமுக விழா, எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா, திருப்பூர், காங்கயம் ரோடு, ருக்மணியம்மாள் ஓட்டலில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சீரங்கராயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். சபக்தனி நாவல் அறிமுகம் செய்யப்பட்டு, மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் பேசினார். நாவலாசிரியர் சும்சுதீன் ஹீரோ ஏற்புரையும், பின்னல் புக் டிரஸ்ட் காமராஜ் வாழ்த்துரையும் வழங்கினர்.கவிதை போட்டியில் பரிசு பெற்ற கவிஞர் நறுமுகை, சூழலியல் விருது பெற்ற கோவை சதாசிவம், எழுத்தாளர் மணிவண்ணன், அகவை முதிர்ந்த தமிழறிஞர் குமாரசாமி உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.