UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 09:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்:
குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கே.வி. பள்ளியில் வரும் பிப்., 4ம் தேதி காலை 10:00 மணிக்கு மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நடக்கிறது.அருவங்காடு கைரளி அமைப்பின் சார்பில், 5 குரூப்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. எல்.கே.ஜி., முதல் 2ம் வகுப்பு வரை எந்த ஓவியங்களும் வரையலாம். 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை திருவிழாக்கள், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மகளிர் திறன், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாக தீட்டலாம்.ஒவ்வொரு குரூப்பிற்கும் 5 விருதுகள் வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.