UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 09:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தக திருவிழா பிப்., 9ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினரால், 100 புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. புத்தக திருவிழாவுக்கான, விளம்பர பதாகையை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று வெளியிட்டார். அவற்றை, பயிற்சி கலெக்டர் சங்கீதா பெற்றுக் கொண்டார்.