sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜாக்டோ - ஜியோ மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் குண்டுக்கட்டாக கைது

ஜாக்டோ - ஜியோ மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் குண்டுக்கட்டாக கைது

ஜாக்டோ - ஜியோ மறியல் போராட்டம் அரசு ஊழியர்கள் குண்டுக்கட்டாக கைது


UPDATED : ஜன 31, 2024 12:00 AM

ADDED : ஜன 31, 2024 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2024 12:00 AM ADDED : ஜன 31, 2024 09:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உட்பட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.சென்னையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர்.30 அம்ச கோரிக்கைகள்
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.சரண்டர் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக, தி.மு.க., அரசை வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுதும் ஜாக்டோ ஜியோ சார்பில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.சென்னையில், டி.பி. ஐ., வளாகம் முன் நடந்த போராட்டத்தில், கூட்டமைப்பு மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாயவன், அன்பரசு, வெங்கடேசன், உதயகுமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, தி.மு.க., அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.வாகன நெரிசல்
போராட்டத்தால், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, டி.பி.ஐ., வளாக வாயில் கதவுகள் பூட்டப்பட்டு, நேற்று மாலை வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டத்தால் கல்லுாரி சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.அப்போது, பலர் கைதாக வராமல், சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கி, பஸ்சில் ஏற்றி சமூக நலக்கூடத்துக்கு அழைத்து சென்றனர்.மதுரை, திருநெல்வேலி, திருச்சி, காஞ்சிபுரம், தென்காசி, தஞ்சாவூர், நாகை என, அனைத்து மாவட்டங்களிலும், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.பிப்., 26 முதல் வேலை நிறுத்தம்
மதுரையில், ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் அளித்த பேட்டி:
முந்தைய ஆட்சியில் போராடிய போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார். அவர் முதல்வரான பின், ஆறு முறை சந்தித்தும், நிதிநிலை சரியானதும் நிறைவேற்றுவோம் என்றார். அந்த நம்பிக்கையுடன் 30 மாதங்களாக காத்திருந்தும், கோரிக்கை நிறைவேறவில்லை.வரும் நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால், பிப்., 10ல் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். பிப்.,15ல் ஒரு நாள் வேலை நிறுத்தமும், பிப்., 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தமும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us