புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அகூர் பள்ளி முதலிடம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அகூர் பள்ளி முதலிடம்
UPDATED : பிப் 03, 2024 12:00 AM
ADDED : பிப் 03, 2024 09:34 AM
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த, 2022 - 23ம் ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம், 76 மையங்கள் அமைத்து, மொத்தம், 1,511 பேர் எழுத படிக்காத தெரியாதோருக்கு தன்னார்வலர்கள் மூலம் எழுத்தறிவு மற்றும் வாசிப்பு திறன் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் தேர்வும் எழுதினர்.இதில், தேர்வு எழுதியோருக்கு கல்வி சான்றுகள் வழங்கப்பட்ன. இந்நிலையில், சிறந்த தன்னார்வலர்கள் தேர்வில் மாவட்ட அளவில், முதலிடம், திருத்தணி ஒன்றியம் அகூர் சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளியின் தன்னார்வலர் அபிராமி முதலிடம் பிடித்தார்.இதையடுத்து நேற்று, புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த தன்னார்வலர் அபிராமி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை நேசமணி ஆகியோருக்கு விருது மற்றும் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திருத்தணியில் நடந்தது.இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்று தலைமை ஆசிரியர் நேசமணி, தன்னார்வலர் அபிராமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர். இந்நிகழ்வில், திருத்தணி வட்டார கல்வி அலுவலர்கள் சலபதி, நடராஜன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

