sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காய்கறிகள் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் பேச்சு

காய்கறிகள் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் பேச்சு

காய்கறிகள் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் பேச்சு


UPDATED : பிப் 03, 2024 12:00 AM

ADDED : பிப் 03, 2024 06:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2024 12:00 AM ADDED : பிப் 03, 2024 06:25 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்:
ஒவ்வொரு மனிதனும் தினமும் 280 முதல் 320 கிராம் காய்கறிகளை உணவாக சாப்பிடும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தெரிவித்தார்.பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் அங்கக வேளாண்மையின் வயல் விழா முதல்வர் ராஜாங்கம் தலைமையில் நடந்தது.தக்காளியில் விவசாய உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் பற்றி முதல்வர் பேசியதாவது: 
மனித நல் வாழ்வுக்கு இயற்கை வேளாண்மை முக்கியத்துவம் இன்றியமையாது. ஒரு மனிதன் தினமும் 280 முதல் 320 கிராம் இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை உணவாக சாப்பிடும் போது, உடலில் அனைத்து வகையான ஊட்டச்சத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. வியாபார ரீதியில் சாகுபடி முறைகளை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் செய்து பயன்பெறலாம் என்றார்.வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம், தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆறுமுகம் பேசினர். தமிழகத்திலிருந்து 100 காய்கறி முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் மற்றும் காய்கறி விதைகள் வழங்கப்பட்டது.திட்ட ஆராய்ச்சியாளர்கள் ஸ்ரீமதிபிரியா, ராஜேஷ், நாகேஸ்வரி, காய்கறி பயிர்கள் துறை தலைவர் சுகன்யா கன்னா, பேராசிரியர்கள் ராஜமாணிக்கம் கல்பனாபங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us