sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ மாணவர்களுக்கு ரூ.197 கோடியில் விடுதிகள்

மருத்துவ மாணவர்களுக்கு ரூ.197 கோடியில் விடுதிகள்

மருத்துவ மாணவர்களுக்கு ரூ.197 கோடியில் விடுதிகள்


UPDATED : பிப் 03, 2024 12:00 AM

ADDED : பிப் 03, 2024 06:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2024 12:00 AM ADDED : பிப் 03, 2024 06:02 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பயிலும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரி, இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டடம் கட்ட, நேற்று, அடிக்கல் நாட்டப்பட்டது.இதில் பங்கேற்று அடிக்கல் நாட்டிய பின், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
தங்கும் விடுதி, 464 அறைகளுடன் கட்டப்பட உள்ளது. இதில், 2.53 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளத்துடன் 14 தளங்களில் பார்வையாளர்கள், மருத்துவர்கள், வார்டன்கள், கணினி, சமையல், படித்தல், பொழுதுபோக்கு அறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைகின்றன. இதற்கான, திட்ட மதிப்பீடு, 132.24 கோடி ரூபாயாகும்.அதேபோல், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு, 64.90 கோடி ரூபாய் செலவில், 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளத்துடன் 13 தளங்களில், பல்வேறு வசதிகளுடன், 274 அறைகள் அமைய உள்ளன. 1,500 மாணவர்கள் தங்கி பயில்வதற்கு வசதியாக, இந்த கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.மூன்று ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகள், 18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என, பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, சுப்பிரமணியன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us