sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமை ஆசிரியை மீது கல்வித்துறை விசாரணை; சி.இ.ஓ., தகவல்

தலைமை ஆசிரியை மீது கல்வித்துறை விசாரணை; சி.இ.ஓ., தகவல்

தலைமை ஆசிரியை மீது கல்வித்துறை விசாரணை; சி.இ.ஓ., தகவல்


UPDATED : பிப் 04, 2024 12:00 AM

ADDED : பிப் 04, 2024 09:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2024 12:00 AM ADDED : பிப் 04, 2024 09:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
இடமாறுதல் செய்யப்பட்ட தலைமையாசிரியை மீது, துறை விசாரணை நடப்பதாக, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்தார்.தொண்டாமுத்துார் வட்டாரத்திற்குட்பட்ட, ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவி ஒருவர், உடற்கல்வி ஆசிரியர் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, சமீபத்தில் புகார் அளித்தார்.இதனால், சம்மந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பள்ளியில் உள்ள 12 ஆசிரியர்களுக்கு, போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டது.இப்புகாரை, போலீசாரிடம் தெரிவிப்பதற்கு முன்பே, அப்பள்ளி தலைமையாசிரியை ஜீவாஹட்சனிடம், பெற்றோருடன் வந்து புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என, சம்மந்தபட்ட மாணவி, எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.சொந்த காரணங்களால் விடுப்பில் இருந்த இத்தலைமையாசிரியர், மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில், இவருக்கு மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. போக்சோ வழக்கு தொடர்பான புகாரில் தலைமையாசிரியரை, இடமாறுதல் மட்டும் செய்தது கண்டனத்திற்குரியது என்ற கருத்து எழுந்தது.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டபோது, மாணவி புகார் அளித்துள்ளதால், தலைமையாசிரியர் மீது துறை ரீதியான விசாரணை நடக்கிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us