பெங்களூரு ஆசிரியர் தொகுதி தேர்தல்; 3 நாட்கள் மதுபான விற்பனைக்கு தடை
பெங்களூரு ஆசிரியர் தொகுதி தேர்தல்; 3 நாட்கள் மதுபான விற்பனைக்கு தடை
UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:17 AM
பெங்களூரு:
கர்நாடக சட்ட மேலவையின் பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடப்பதால், வரும் 14ம் தேதி முதல் மூன்று நாட்கள் மதுபானம் விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்தா வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக சட்ட மேலவையின், பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கு, பிப்ரவரி 14ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலை அமைதியான, நேர்மையான முறையில் நடத்த, பெங்களூரு நகர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.தேர்தல் நல்ல முறையில் நடக்க, சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். எனவே, பிப்ரவரி 14ம் தேதி மாலை 5:00 மணி முதல் 17ம் தேதி காலை 6:00 மணி வரை, மதுபானம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள், பார்களை மூட வேண்டும்.பெங்களூரு நகர மாவட்டத்துக்கு உட்பட்ட எலஹங்கா, பேட்ராயனபுரா, யஷ்வந்த்பூர், தாசரஹள்ளி, மஹாதேவபுரா, பெங்களூரு தெற்கு, ஆனேக்கல் சட்டசபை தொகுதிகளின் ஆசிரியர்கள் ஓட்டு போடுவர். ஜனவரி 16 முதல் பிப்ரவரி 23 வரை, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

