UPDATED : பிப் 07, 2024 12:00 AM
ADDED : பிப் 07, 2024 09:35 AM
வடமதுரை:
தமிழக அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.14.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகளில் இதற்கான நிதி ஒதுக்கீடு இல்லாத நிலையில் பள்ளி நிர்வாகம், பி.டி.ஏ., உள்ளூர் நன்கொடையாளர்கள் உதவியுடன் சில இடங்களில் மட்டுமே ஆண்டு விழா நடக்கும்.இந்நிலையில் கடந்தாண்டு மானிய கோரிக்கையின் போது அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக அரசு மேல் நிலைப் பள்ளிகள் 3156, உயர்நிலை பள்ளிகள் 3094, நடுநிலைப் பள்ளிகள் 6976, தொடக்கப் பள்ளிகள் 24350 என மொத்தம் 37576 பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த உத்தரவும், மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது.இதன்படி 100 மாணவருக்கு கீழ் இருந்தால் ரூ.2500-ம், 101 முதல் 250 வரை ரூ.4000ம், 251 முதல் 500 வரை ரூ.8000ம், 501 முதல் 1000 வரை ரூ.15,000ம், 1001 முதல் 2000 வரை ரூ.30,000ம், 2000த்திற்கு மேல் ரூ.50,000ம் ஆண்டு விழாவிற்கென தனி நிதி வழங்கப்படுகிறது.பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து பிப்.10க்குள் நடத்த வேண்டும் என அரசு சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. தனையடுத்து அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடக்க துவங்கியுள்ளது.