sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை கவுன்சில் உறுப்பினர் பதவி நிபந்தனையை நீக்க கோரிக்கை

பல்கலை கவுன்சில் உறுப்பினர் பதவி நிபந்தனையை நீக்க கோரிக்கை

பல்கலை கவுன்சில் உறுப்பினர் பதவி நிபந்தனையை நீக்க கோரிக்கை


UPDATED : பிப் 07, 2024 12:00 AM

ADDED : பிப் 07, 2024 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2024 12:00 AM ADDED : பிப் 07, 2024 09:45 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர் பிரதிநிதிகளை, அகாடமிக் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை பல்கலையின் பதிவாளருக்கு, பேராசிரியர் பேரவை பொதுச்செயலர் எஸ்.எஸ்.சுந்தரம் அனுப்பியுள்ள கடித விபரம்:
சென்னை பல்கலைக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, பல்கலையில் இருந்து இரண்டு ஆண்டுகளாக, நியமனத்துக்கான கல்வித்தகுதி ஒப்புதல் வழங்கப்படவில்லை.கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.யின் உத்தரவுப்படி, ஊதியம் நிர்ணயிக்கப்படாததால், இந்த ஒப்புதல் வழங்கவில்லை என, பல்கலை தெரிவித்து உள்ளது.இந்நிலையில், கல்வித்தகுதி ஒப்புதல் வழங்காத காரணத்தை கூறி, அவர்களை பல்கலையின் அகாடமிக் கவுன்சிலில் உறுப்பினர்களாக நியமிக்க, பல்கலை அனுமதிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் வேறு எந்த பல்கலையிலும், இதுபோன்ற கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. சென்னை பல்கலையில் மட்டுமே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலையின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர்களில் இருந்து, சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு, நிபந்தனைகளை நீக்கி, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர் பிரதிநிதிகளை, அகாடமிக் கவுன்சில் உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us