கவர்னர் நாளை வருகை: மூன்று இடங்களில் எஸ்.பி., ஆய்வு
கவர்னர் நாளை வருகை: மூன்று இடங்களில் எஸ்.பி., ஆய்வு
UPDATED : பிப் 07, 2024 12:00 AM
ADDED : பிப் 07, 2024 09:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
தேனி மாவட்டத்தில் கவர்னர் ரவி (பிப்.,8 ல்) நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்க உள்ள மூன்று இடங்களில் எஸ்.பி., சிவபிரசாத், முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.கவர்னர் ரவி தேனி மதுரை ரோட்டில் உள்ள மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கிறார்.பின் அங்குள்ள திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இதனால் எஸ்.பி., சிவபிரசாத் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது டி.எஸ்.பி.,க்கள் உடனிருந்தனர்.