UPDATED : பிப் 07, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 08:46 AM
சென்னை:
லோக்சபா தேர்தலிக்கு முன் கல்லூரி தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.தமிழகத்தில் மூன்று பல்கலை துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வருடன் பேசி, துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர். அரசு நியமிப்பவர்களை கவர்னர் ஏற்பார். தமிழ் தெரிந்தவர்கள் துணைவேந்தர்களாக வந்தால், மக்கள் அவரை சந்தித்து பேச நன்றாக இருக்கும்.சேலம் பல்கலை துணைவேந்தர் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து கருத்து கூறக்கூடாது. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்கள் மீதும், மாநிலத்திற்கு உட்பட்ட பிரச்னையிலும், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும்படி, கவர்னரிடம் தெரிவித்துள்ளோம். லோக்சபா தேர்தலுக்கு முன் கல்லுாரி தேர்வுகள் முடிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர், ராஜகண்ணப்பன் கூறினார்.