அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுபோட்டி
அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுபோட்டி
UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 09, 2024 09:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடந்தது.இதில், 6 முதல் 8ம் வகுப்பு, 9 முதல் பத்தாம் வகுப்பு என இருபிரிவுகளாக மாணவர்களுக்கு பேச்சுபோட்டி நடந்தது. பரிசளிப்பு விழாவில் காப்பாட்சியர் சிவக்குமார் வரவேற்றார். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஓய்வுபெற்ற இந்திய கடற்படை காமாண்டர் நடராஜன் சான்றிதழ் கேடயம், புத்தகம் வழங்கினார்.பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அருங்காட்சியகம் இளநிலை உதவியாளர் கங்கா பிரசாத், காவலர் சுரேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.