UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 09, 2024 09:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:
துணை தொழில் தேர்வுக்கு பிப். 15க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-19ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள முடியாத, தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.எனவே துணைத்தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற ஐ.டி.ஐ.,க்களில் பிப். 15க்குள் தொடர்பு கொள்ளலாம். தேர்வு குறித்த தகவல்களை உடனுக்குடன் http://skilltraining.tn.gov.in, https://ncvtmis.gov.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம், என்றார்.