UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 09, 2024 10:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தாம்பரத்தில் உள்ள சித்தா ஆராய்ச்சி கவுன்சிலானது, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டாலும், ஆய்வு நடவடிக்கைகளை தன்னாட்சி அதிகாரத்துடன் முன்னெடுத்து வரும் அமைப்பு.இதன் தலைமை இயக்குனர் பொறுப்புக்கு, டாக்டர் முத்துகுமாரின் பெயரை, மத்திய அமைச்சகத்தின் நியமன குழு இறுதி செய்தது. இதையடுத்து, மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராக, முத்துகுமார் பொறுபேற்றுள்ளார். அப்பதவியில் அவர், ஐந்தாண்டு வரை பொறுப்பில் இருப்பார்.