UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 08:41 AM
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 4 தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பை, அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் - 4 தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்வுக்கு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில், இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.சென்னையில் நேற்று இலவச பயிற்சி வகுப்பை, அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். துறை கமிஷனர் சுந்தரவல்லி திட்ட விளக்க உரையாற்றினார். பயிற்சி வகுப்புகள், வேலை நாட்களில், காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரை நடக்கும். போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம்பெண்கள் பயன் பெறலாம்.நிகழ்ச்சியில், அமைச்சர் கணேசன், ஏற்கனவே கூட்டுறவுத் துறை உதவியாளர் பணிக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று, தேர்ச்சி பெற்ற, 13 மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.