sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டர்போல் உதவியை நாட முடிவு

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டர்போல் உதவியை நாட முடிவு

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்டர்போல் உதவியை நாட முடிவு


UPDATED : பிப் 09, 2024 12:00 AM

ADDED : பிப் 10, 2024 08:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2024 12:00 AM ADDED : பிப் 10, 2024 08:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு, &'இ - மெயில்&' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளது.சென்னை நந்தம்பாக்கம், அண்ணா நகர், கோபாலபுரம், பெரம்பூர் உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு, பிப்., 8 காலை 10:00 மணியில் இருந்து, மாலை 3:40 வரை, இ - மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால், பள்ளிகளின் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் முழுமையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், எந்தவித வெடி பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. அதேநேரத்தில், அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன், வெடிகுண்டு மிரட்டல்கள் எந்த இடத்தில் இருந்து வந்துள்ளன; மிரட்டல் விடுக்க பயன்படுத்தப்பட்ட கருவி, சர்வர் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக சென்னை மாநகர போலீசார் தெரிவித்தனர்.மிரட்டல் விடுத்த நபர் அங்கீகரிப்படாத தனியார் நெட்வொர்க் மூலம் மெயில் அனுப்பியதால் அதன் ஐ.பி முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. சைபர் குற்ற வல்லுநர்கள் உதவியால் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வரும் நிலையில், வெளிநாடுகளின் தனியார் நெட்வொர்க்கை பயன்படுத்தி மெயில் அனுப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியோடு இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீஸ் முடிவு செய்துள்ளனர்.வழக்கம்போல் பள்ளிகள்
மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டு, குழந்தைகள், மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்ததை அடுத்து, இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us