UPDATED : பிப் 10, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 09:43 AM
அருப்புக் கோட்டை:
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் தொல்லியல் நாணயவியல் கண்காட்சி நடந்தது.வரலாற்று துறை, பாண்டியநாடு பண்பாட்டு மையம் இணைந்து நடத்திய கண்காட்சிக்கு மைய தலைவர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். துறை தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். முதல்வர் உமாராணி துவக்கி வைத்தார்.சிற்பங்கள், பெருங்கற்கால இரும்பு எச்சங்கள், சங்க கால பானை ஓடுகள், சுடுமண் குழாய்கள், பொம்மைகள், பழங்கால தமிழ் எழுத்து வடிவங்கள், சோழர், நாயக்கர்கள், ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.மாணவர்கள் பழங்கால எழுத்துக்களை வாசித்தும், எழுதியும் பழகினர். தொல்லியல் பொருட்கள், சிற்பங்கள் குறித்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதர், பேராசிரியர்கள் லக்ஷ்மணமூர்த்தி, முனீஸ்வரன், உதவி பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர் விளக்கினர்.பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், வரலாற்று ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் செல்லபாண்டியன் நன்றி கூறினார்.