இரண்டாம் ஆண்டு புத்தக திருவிழா காஞ்சியில் கோலாகல துவக்கம்
இரண்டாம் ஆண்டு புத்தக திருவிழா காஞ்சியில் கோலாகல துவக்கம்
UPDATED : பிப் 10, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 09:45 AM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, இரண்டாம் ஆண்டு புத்தக திருவிழா, கலெக்டர் வளாக மைதானத்தில் நேற்று துவங்கியது.குழந்தைகளுக்கான புத்தகம், சிறுகதை, நாவல், ஆங்கில மொழி என, ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்ற 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக திருவிழாவை, சிறு, குறு மற்றும் நடுத்தரநிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இதில், கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சுந்தர், எழிலரசன், எஸ்.பி., சண்முகம், மாவட்ட ஊராட்சி தலைவர் மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வேலைவாய்ப்பு அலுவலகம், பள்ளிக்கல்வித் துறை, நுாலகத்துறை போன்ற துறைகளுக்கு தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க, தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள், சிறப்பு அழைப்பாளர்களின் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை புத்தக காட்சி நடைபெறும். இப்புத்தக காட்சிக்கு பள்ளி மாணவ - மாணவியரை அழைத்து வரவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.புத்தக காட்சி வரும் 19ம் தேதி வரை நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.