sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவ மாணவர்களின் ரீல்ஸ் வீடியோ; நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம்

/

மருத்துவ மாணவர்களின் ரீல்ஸ் வீடியோ; நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம்

மருத்துவ மாணவர்களின் ரீல்ஸ் வீடியோ; நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம்

மருத்துவ மாணவர்களின் ரீல்ஸ் வீடியோ; நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம்


UPDATED : பிப் 12, 2024 12:00 AM

ADDED : பிப் 12, 2024 01:34 PM

Google News

UPDATED : பிப் 12, 2024 12:00 AM ADDED : பிப் 12, 2024 01:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
கர்நாடகாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் 38 பேர், தாங்கள் படிக்கும் கல்லுாரி வளாகத்தில் நடனமாடியதை சமூக வலைதளத்தில், &'ரீல்ஸ்&' வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.சமூக வலைதளதம்
கர்நாடகாவில் சித்ரதுர்கா மாவட்டத்தின் பரமசாகரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, ஒப்பந்த அடிப்படையில் டாக்டராக வேலை ெய்தவர் அபிஷேக், 30.இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளது. இதையொட்டி தன் வருங்கால மனைவியை, தான் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷுட் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.இது பெரும் சர்ச்சையான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து, சித்ரதுர்கா கலெக்டர் வெங்கடேஷ் கடந்த 9ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், கர்நாடகாவில் கதக் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் சிலர், கல்லுாரி வளாகத்தில் சமீபத்தில் நடனமாடினர்.இதை, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஹிந்தி மற்றும் கன்னட பாடல்களின் பின்னணியுடன் கூடிய ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.எனினும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பணி செய்யாமல் பொறுப்பற்ற முறையில் நடனமாடியதாகவும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர்.இடையூறு
இது போன்ற கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நடனமாடிய மாணவர்கள் 38 பேரின் பயிற்சிக் காலத்தை மேலும் 10 நாட்கள் நீட்டித்து கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டுஉள்ளது.இது குறித்து மருத்துவக் கல்லுாரியின் இயக்குனர் டாக்டர் பசவராஜ் பொம்மனஹள்ளி கூறுகையில், இது போன்ற வீடியோக்களை கல்லுாரி வளாகத்திற்குள் எடுத்தது மிகப்பெரிய தவறு; மருத்துவமனையில் நோயாளி களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 38 மாணவர்களின் பயிற்சிக் காலத்தை, 10 நாட்கள் கூடுதலாக நீட்டித்து உள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us