UPDATED : பிப் 13, 2024 12:00 AM
ADDED : பிப் 13, 2024 10:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
குழந்தைகள் பெற்றோருடன் ஒரு குடும்பமாக வளர்வதன் அவசியம் குறித்தும், குழந்தை வளர்ப்பு, பராமரிப்பு சேவை குறித்தும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.இதற்காக, தமிழக சமூக பாதுகாப்பு துறை, யூனிசெப், சியாப் அமைப்பு இணைந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும், குடும்ப அமைப்பில் வளர்வதை உறுதிப்படுத்த, விதை, நிழல் என, இரு குறும்படங்களை தயாரித்துள்ளன.இப்படங்களை நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், கூடுதல் செயலர் சீதாலட்சுமி, இணை இயக்குனர் தனசேகரபாண்டியன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.