மலேசிய வர்த்தக சங்கத்துடன் தொழில் வர்த்தக சங்கம் ஒப்பந்தம்
மலேசிய வர்த்தக சங்கத்துடன் தொழில் வர்த்தக சங்கம் ஒப்பந்தம்
UPDATED : பிப் 13, 2024 12:00 AM
ADDED : பிப் 13, 2024 05:38 PM
மதுரை:
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நுாறாவது ஆண்டின் 4வது செயற்குழுக் கூட்டம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது.தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இந்தியாவுக்கான மலேசிய துாதர் சுஷ்மா முன்னிலை வகித்தார்.தென்தமிழகம் மற்றும் மலேசிய நாடுகளுடனான இருவழி வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அங்குள்ள செலாங்கர் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் என்டர்பிரீனியர் சங்கத்துடன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதில் தலைவர் ஜெகதீசன், அந்நாட்டு வர்த்தக சங்கம் சார்பில் டத்தோ வி.சண்முகநாதன் கையெழுத்திட்டனர்.முன்னதாக மலேசிய நாட்டின் பல்வேறு தொழில், வணிக சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய பல்வேறு தொழில், வணிக வாய்ப்புகள் கண்டறியப்பட்டன. ஏற்பாடுகளை வர்த்தக செயற்குழு உறுப்பினர்கள் தனுஷ்கோடி, வரதராஜன் செய்திருந்தனர்.