தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : பிப் 15, 2024 12:00 AM

ADDED : பிப் 15, 2024 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 15, 2024 12:00 AM ADDED : பிப் 15, 2024 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
கல்வி உதவித்தொகை தேவைப்படும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தெழிற்படிப்புகளுக்கு, கல்வி உதவித்தொகை பெற, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். நடப்பாண்டு புதிதாக கல்வி உதவித்தொகை தேவைப்படுவோர், http://ssp.tn.gov.in என்கிற இணையதள முகவரியில், ஆதார் எண் அளித்து, விவரங்களை உறுதி செய்ய வேண்டும்.scholarship portal என்கிற கல்வி உதவித்தொகை இணையதளம், இம்மாதம் 1 ம் தேதி முதல்செயல்படத்துவங்கியுள்ளது. புதிய பதிவுக்கான விண்ணப்பங்களை வரும், 29ம் தேதிக்குள் இணையதளத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us