கமிஷனர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
கமிஷனர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
UPDATED : பிப் 16, 2024 12:00 AM
ADDED : பிப் 16, 2024 05:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.இந்நிலையில், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் மாற்றுத்திறனாளிகள், காலை 9:45 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். சில மணிநேரம் நடந்த மறியலால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.