தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வாங்குவோர் - விற்போர் சந்திப்பு
UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:09 AM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வணிக மேம்பாட்டு இயக்ககம் மற்றும் கொச்சின் நறுமண பயிர்கள் வாரியம் சார்பில், வாங்குவோர் - விற்பனையாளர் சந்திப்பு இன்று நடக்கிறது.இதில், மஞ்சள், மிளகு, ஏலக்காய், மிளகாய், பூண்டு, ஜாதிக்காய் போன்ற நறுமண பயிர் சார்ந்த தொழில் துவங்க விரும்புவோர், டன் கணக்கில் கொள்முதல் செய்ய விரும்புபவர்கள் பங்கேற்கலாம்.பல்கலை வளாகத்தில், இன்று காலை, 9:00 மணி முதல் சந்திப்பு நிகழ்வு துவங்கவுள்ளது. விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.பங்கேற்க, பதிவு கட்டணம் ஏதும் இல்லை. தொழில்முனைவோராக விரும்புபவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்பதன் வாயிலாக, பல்வேறு நெட்வொர்க்கிங் தொடர்புகள் கிடைப்பதுடன், ஸ்டார்ட் அப் ஆலோசனைகளும் கிடைக்கும் என, பல்கலை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.