UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:10 AM
உடுமலை:
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, உடுமலையில் அறிவியல் திருவிழா பிப்., 24, 25 தேதிகளில் நடக்கிறது.உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், சுற்றுச்சூழல் சங்கம், தேஜஸ் ரோட்டரி சங்கம், கமலம் கலை அறிவியல் கல்லுாரி, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இணைந்து பிப்., 24, 25 உள்ளிட்ட இரண்டு நாட்கள் அறிவியல் திருவிழா நடத்துகிறது.இவ்விழா அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. மாணவர்களுக்கு பேச்சு, அறிவியல் வினாடி வினா, கட்டுரை, ஓவியம், அறிவியல் புதுமை படைப்புகள் கண்காட்சி உட்பட தனித்திறன் போட்டிகள் நடக்கிறது.விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. நடப்பாண்டில் கூடுதலாக ரோபோடிக்ஸ் மற்றும் ராக்கெட் பயிற்சி பட்டறை இடம் பெறுகிறது. வரும் 24ம் தேதி கண்காட்சியில், ஒன்று முதல் மேல்நிலை வகுப்பு வாரியாக படைப்புகள் காட்சிப்படுத்தலாம்.எளிய அறிவியல் சோதனைகள், இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளித்துறை, விவசாயம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட தலைப்புகளில் படைப்புகள் காட்சிப்படுத்தலாம். அறிவியல் சிந்தனையை வளர்க்கும் புதுமையான கருத்துகளை இரண்டு நிமிட குறும்படங்களாக கொண்டு வரலாம்.போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தொலைநோக்கி, பைனாகுலர், ரோபோடிக்ஸ் தொகுப்பு, மடிப்பு நுண்ணோக்கி உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படுகிறது.போட்டிகள் மற்றும் கண்காட்சியில் பங்கேற்க, பிப்., 23ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் போட்டிகள் குறித்தும் பயற்சி பட்டறை குறித்தும் தகவல்கள் பெறுவதற்கு 8778201926, 7305967764, 9965644666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.