போட்டி தேர்வுபயிற்சி மையம் பிப். 27ல் திறப்பு அமைச்சர் சக்கரபாணி தகவல்
போட்டி தேர்வுபயிற்சி மையம் பிப். 27ல் திறப்பு அமைச்சர் சக்கரபாணி தகவல்
UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:33 AM
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டி போட்டி தேர்வு பயிற்சி மையத்தை முதல்வர் ஸ்டாலின் பிப். 27ல் திறந்து வைக்க உள்ளதாக உணவுத்துறை அமைச்சர்சக்கரபாணி கூறினார்.மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரத்தில் 562 பயனாளிகளுக்கு ரூ.76.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:
காளாஞ்சிபட்டி போட்டி தேர்வு பயிற்சி மையத்தை முதல்வர் ஸ்டாலின் பிப். 27ல் திறந்து வைக்க உள்ளார்.சின்னையகவுண்டன் வலசில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் பழநி ஆண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் சொந்த கட்டடம் கட்டுவதற்கு ரூ.25 கோடி நிதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட உள்ளது என்றார்.எம்.எல். ஏ., காந்தி ராஜன், டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், பழநி ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் முத்துச்சாமி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் கணேஷ், ஊராட்சித் தலைவர்கள் சத்தியபுவனா, அய்யம்மாள், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டனர்.