தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழங்குடியின வாலிபர்களுக்கு ட்ரோன் பயிற்சி

பழங்குடியின வாலிபர்களுக்கு ட்ரோன் பயிற்சி

பழங்குடியின வாலிபர்களுக்கு ட்ரோன் பயிற்சி


UPDATED : பிப் 17, 2024 12:00 AM

ADDED : பிப் 17, 2024 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2024 12:00 AM ADDED : பிப் 17, 2024 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகாவில் பழங்குடியின இளைஞர்களுக்கு ட்ரோன் மூலம் புகைப்படம், வீடியோக்கள் எடுக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.பழங்குடியினர் நலன்
* பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும், ஆசிரம பள்ளிகளின் பெயர், மகரிஷி வால்மீகி ஆதிவாசி புடகட்டு குடியிருப்பு பள்ளி என்று பெயர் மாற்றப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரை இயங்கும் பள்ளிகளில், புதிதாக ஆறாம் வகுப்பு துவங்கப்படும். 1 முதல் 7ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் பள்ளிகளில், புதிதாக 8ம் வகுப்பு துவங்கப்படும்.* ஏழு மாவட்ட தலைநகரங்களில் பழங்குடியின மாணவர்களுக்காக 14 விடுதிகள் கட்டப்படும். இதில் ஏழு விடுதிகள் மாணவர்களுக்கும், ஏழு விடுதிகள் மாணவியருக்கும் ஒதுக்கப்படும்* இந்திய அறிவியல் கழகம், சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் வகுப்புகளில், ஆறு முதல் 12 மாத வகுப்புகளில் படிக்கும் 200 இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்* பழங்குடியின சமூக இளம் தலைமுறையினர் 5,000 பேருக்கு ட்ரோன் மூலம் புகைப்படம், வீடியோக்கள் எடுக்க பயிற்சி அளிக்கப்படும்.* கோரகா, ஜெனுகுருபா, யரவா, காடுகுருபா, சோலிகா, சித்தி, மலைகுடி, ஹலசரு உட்பட 23 நாடோடிகள் சமூகத்தின் வளர்ச்சிக்காக, இரண்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். நாடோடி மக்கள் குழந்தைகளுக்கு, ஏகலைவா மாடல் குடியிருப்பு பள்ளியில் 20 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கு நுழைவுத்தேர்வு கிடையாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us