sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்த பேராசிரியர், மாணவர்கள்: விசாரணையில் அம்பலம்

/

ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்த பேராசிரியர், மாணவர்கள்: விசாரணையில் அம்பலம்

ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்த பேராசிரியர், மாணவர்கள்: விசாரணையில் அம்பலம்

ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்த பேராசிரியர், மாணவர்கள்: விசாரணையில் அம்பலம்


UPDATED : பிப் 17, 2024 12:00 AM

ADDED : பிப் 17, 2024 10:00 AM

Google News

UPDATED : பிப் 17, 2024 12:00 AM ADDED : பிப் 17, 2024 10:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி உள்ள, அரபிக்கல்லுாரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க ரகசிய வகுப்புகள் நடத்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.சமீபத்தில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சையது அப்துல் ரகுமான் உமரி, 52, கோவை பொன்விழா நகரை சேர்ந்த முகமது உசேன் பைசி, 38, குனியமுத்துாரை சேர்ந்த இர்ஷாத், 22 மற்றும் ஜமீல் பாஷா உமரி, 30, ஆகியோரை கைது செய்தனர்.இவர்களில், சையது அப்துல் ரகுமான் உமரி, கோவை அரபிக் கல்லுாரியில் பேராசிரியராகவும், மற்றவர்கள் இவரிடம் மாணவர்களாகவும் இருந்துள்ளனர்.இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள், ஏற்கனவே உடற்பயிற்சி கூடங்கள் நடத்துவது போல ஆயுத பயிற்சி அளித்து வந்தது கண்டறியப்பட்டது.தற்போது, அரபிக் கல்லுாரி பேராசியர் மற்றும் முன்னாள் மாணவர்கள், மாநிலம் முழுதும் ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளனர். நிதி திரட்டுதல், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பாகவும் வகுப்புகளை எடுத்துள்ளனர்.ஒரு ஊருக்கு ஐவர்; அதில் ஒருவரை வழிநடத்தும் லீடராக நியமித்துள்ளனர். தொடர்புக்கு சங்கேத மொழியை பயன்படுத்தி வந்துள்ளனர். ஐ.எஸ்., அமைப்பு ரகசிய கூட்டங்கள், அரபிக் கல்லுாரியில்தான் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விரிவான விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us