தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறந்த நுால் பரிசுக்கு ஐந்து பிரதிகள் போதும்

சிறந்த நுால் பரிசுக்கு ஐந்து பிரதிகள் போதும்

சிறந்த நுால் பரிசுக்கு ஐந்து பிரதிகள் போதும்


UPDATED : பிப் 17, 2024 12:00 AM

ADDED : பிப் 17, 2024 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2024 12:00 AM ADDED : பிப் 17, 2024 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழில் சிறந்த நுால்களை எழுதவும் பதிப்பிக்கவும், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், சிறந்த நுால் பரிசுகள் வழங்கப்படுகின்றன.இதில், 33 தலைப்புகளில் வெளியிடப்படும் நுால்கள் தேர்வு செய்யப்பட்டு, நுாலாசிரியருக்கு 30,000 ரூபாயும், பதிப்பகத்தாருக்கு 10,000 ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இதற்கு, 10 நுால் பிரதிகளை தமிழ் வளர்ச்சி துறையிடம் வழங்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.அதிக விலையுள்ள நுால்களை பதிப்பித்த பதிப்பகங்கள், இந்த தேர்வுக்கு நுால்களை அனுப்புவதில்லை. இதுகுறித்து, கடந்த மே 18ல், நம் நாளிதழில் செய்தி வெளிடப்பட்டது. இதையடுத்து, சிறந்த நுால் பரிசுக்கு இந்தாண்டு முதல் ஐந்து பிரதிகளை அனுப்பினால் போதும் என, தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us