UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 10:02 AM
சென்னை:
காசி தமிழ் சங்கமம் 2.0 அனுபவப் பகிர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்த மாதம் பரிசு வழங்கப்படும் என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.தமிழக கவர்னர் மாளிகை சார்பில், காசி தமிழ் சங்கமம் 2.0 - 2023ல் பங்கேற்றவர்கள் இடையே, அனுபவ பகிர்வு போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றியாளர்களை நிபுணர் குழு தேர்வு செய்தது.மாணவர்கள் குழுவில், நான்கு பேர்; விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் குழுவில் மூவர்; வர்த்தகர்கள் குழுவில் மூவர்; எழுத்தாளர்கள் குழுவில் நான்கு பேர்; ஆசிரியர்கள் குழுவில் ஐந்து பேர்; ஆன்மிக குழு மற்றும் தொழில் முறை குழுவில் தலா மூவர் வீதம், பரிசுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.அப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம், கவர்னர் மாளிகையில் நடக்கும் விழாவில், கவர்னர் ரவி பரிசு மற்றும் சான்றிதழை வழங்க உள்ளார்.