UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 10:19 AM
இது, 2024 - 25ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும்&' என, தமிழக அரசு அறிவித்துஉள்ளது. கடந்த 2016 முதல், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பகுதி ஒன்றில் தமிழ் மொழிப்பாடம் தேர்வு எழுத வேண்டும்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்கள், பகுதி நான்கில் அவர்கள் தாய்மொழியை விருப்பப் பாடமாக எடுத்து தேர்வு எழுதலாம்.அந்த பாடத்தின் மதிப்பெண்களை, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில், பகுதி நான்கின் கீழ் குறிப்பிடலாம், ஆனால், மாணவர்களின் தேர்ச்சிக்கு, அந்த மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டாம் என, 2015 நவம்பர், 11ல் தமிழக அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த செப்., 21ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், விருப்பப் பாட மதிப்பெண்களை, தேர்ச்சிக்கு கருத்தில் கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, கடந்த நவ., 20ம் தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில், தமிழ்நாடு மாநில பொது கல்வி வாரியத்தின் பதவி வழி உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 2024 - 25ம் கல்வியாண்டு முதல் பின்பற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து உரிய ஆணை வழங்கும்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.அதை பரிசீலனை செய்த அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், விருப்ப மொழிப் பாடத்தில் தேர்வெழுதும் மாணவர்கள், குறைந்தபட்சம், 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.மதிப்பெண் விபரத்தை சான்றிதழில் குறிப்பிடலாம். இதை 2024 - 25ம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தலாம் என, உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளி கல்வித்துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.