UPDATED : பிப் 20, 2024 12:00 AM
ADDED : பிப் 20, 2024 10:16 PM
சென்னை:
சென்னையில் 2025ல் இளம் தொழில் முனைவோருக்கான புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.*முதல் தலைமுறை தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டில், 101 கோடி ரூபாய் மானிய உதவி அளிக்கப்படும்*சிட்கோ வாயிலாக, திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், சிவகங்கை- மானாமதுரை, திருவாரூர் - திருத்துறைப்பூண்டியில், 32 கோடி ரூபாயில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்*மதுரையில், 26,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம், 24 கோடி ரூபாயில் அமைக்கப்படும்*சிட்கோ வாயிலாக, சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில், 5 ஏக்கரில், 118 கோடி ரூபாயில், மூன்று அடுக்குகள் உடைய அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும்*உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில் முனைவோரும் பங்கேற்கும் வகையில், உலக புத்தொழில் மாநாடு, 2025 ஜனவரியில் சென்னையில் நடத்தப்படும்.