UPDATED : பிப் 21, 2024 12:00 AM
ADDED : பிப் 21, 2024 06:57 AM
காரைக்குடி:
இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருதும் ரூ 10 ஆயிரமும் வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கிறது.இவ்வாண்டு நடந்த போட்டியில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சாலைகளை கடக்கும் பாதசாரிகள் பாதுகாப்பு தொடர்பாக ஒலி சமிக்கைகளை வடிவமைப்பது தொடர்பாக ஏழாம் வகுப்பு மாணவர் ஹரி பிரசாத்துக்கும், மாசுக்களை கட்டுப்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களை கண்டுபிடித்த பத்தாம் வகுப்பு மாணவர் செந்தில்நாதனுக்கும் விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டது.மாணவர்கள் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளி தாளாளர் சத்யன் நிர்வாக இயக்குனர் சங்கீதா பள்ளிக்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி பாராட்டினர்.