UPDATED : பிப் 21, 2024 12:00 AM
ADDED : பிப் 21, 2024 10:02 AM
தூத்துக்குடி:
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன் முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பணிகளை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.தமிழகம் வரும் பிரதமர் பிப்., 27ல், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் காலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின், பிரதமர், 28 காலையில் ெஹலிகாப்டரில் புறப்பட்டு, துாத்துக்குடி வருகிறார்.துறைமுக வளாகத்தில் நடக்கும் விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில், 2,233 ஏக்கரில் மேற்கொள்ளும் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.துாத்துக்குடியில் வெளி துறைமுக விரிவாக்க பணிகளையும் துவக்கி வைக்கிறார். ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் 520 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே துாக்கு மேம்பாலத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் அவர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் வருகையை யொட்டி மத்திய தொழில் பாதுகாப்புபடை, கடலோர காவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பாது காப்பு நடவடிக்கை களை மேற் கொண்டு வருகின்றனர்.