நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மகள் நீதிபதியாக தேர்வு
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மகள் நீதிபதியாக தேர்வு
UPDATED : பிப் 23, 2024 12:00 AM
ADDED : பிப் 23, 2024 07:13 AM
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மகள், நீதிபதியாக தேர்வாகி பெருமை சேர்த்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த ஜமீன் இளம்பிள்ளையை சேர்ந்தவர் வீரமணி, 48; விவசாயி. இவரது மனைவி அன்புச்செல்வி, 44. இவர்களுக்கு காந்திபிரியா, 24, நவீன், 22, என்ற மகள், மகன் உள்ளனர். விவசாயின் மகளான காந்திபிரியா, பாண்டமங்கலத்தில் உள்ள மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 முடித்தார். தொடர்ந்து, ஐந்தாண்டு சட்டப்படிப்பை, திருச்சி அரசு சட்ட கல்லுாரியில் முடித்தார்.இந்நிலையில், 2023ல் தமிழ்நாடு உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஆக.,ல் முதல் கட்ட தேர்வும், நவ.,ல், 2ம் கட்ட தேர்வும் முடிந்த நிலையில், கடந்த ஜன.,ல், நடந்த நேர்முக தேர்விலும் வெற்றி பெற்று, மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றார்.இதுகுறித்து காந்திபிரியா கூறுகையில், கடின உழைப்பு வீண்போகாது. யார் எந்த துறையில் இருந்தாலும், விடாமுயற்சி இருந்தால் சாதிக்கலாம் என்றார்.