அரசுப்பள்ளி அருகில் மது பார் அமைக்க முயற்சி; நம்பியூரில் மக்கள் அதிர்ச்சி
அரசுப்பள்ளி அருகில் மது பார் அமைக்க முயற்சி; நம்பியூரில் மக்கள் அதிர்ச்சி
UPDATED : பிப் 23, 2024 12:00 AM
ADDED : பிப் 23, 2024 07:18 AM
நம்பியூர்:
நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், கிளப்புடன் கூடிய தனியார் மது பார் அமைக்க ஏற்பாடு நடப்பதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நம்பியூர் தெற்கு மாவட்ட காங்., தலைவர் ஜவகர் தலைமையில், நம்பியூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா தமிழ்ச்செல்வன், கவுன்சிலர்கள் ரேவதி, பழனிச்சாமி, தங்கராஜ் மற்றும் மக்கள், கோபி கோட்ட கலால் தாசில்தார் ஆஷீயாவிடம், நேற்று மனு அளித்தனர்.மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
நம்பியூர் - சத்தி சாலையில், நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் கடை செயல்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப்பின் இடமாற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில் தனியார் மது பார் அமைக்க முயற்சி நடக்கிறது. அதுவும் அரசுப்பள்ளியில் இருந்து, ௧௦௦ மீட்டர் தொலைவில் அமையவுள்ளதால், மாணவர்கள் நலன் வெகுவாக பாதிக்கப்படும். பார் அமைக்கும் முயற்சியை கைவிடாவிட்டால், தொடர் போராட்டங்களை, மக்கள் முன்னெடுக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு கூறினர்.