பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு
பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு
UPDATED : பிப் 23, 2024 12:00 AM
ADDED : பிப் 23, 2024 05:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு பி., 26 முதல் பிப்., 28 வரை நடைபெற உள்ளது.அரசுத் தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மார்ச்/ஏப்ரல் 2024 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பிப்.,26 முதல் பிப்.,28 வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெற உள்ளது. நேரடித் தனித் தேர்வர்கள் மற்றும் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தேர்வுத் தேதிகளில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அலுவலரை அணுகலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.